அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பவள விழா–சிறப்பு செய்தி
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் செங்குன்றம்கே.பி.சி.அரசு மகளிர் பள்ளிக்கு ரூ1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிவழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பவள விழாவை முன்னிட்டும், சென்னைக் கோட்டம் 2ன் மகளிர் துணைக் குழுவின் சார்பிலும்கற்றல் மேம்பாட்டிற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.துணைக்குழு அமைப்பாளர் கே.துளசி தலைமையில்செங்குன்றம் கே.பி.சி.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கான “பெஞ்ச் – மேசை” ரூ. 75ஆயிரத்தில் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள், ஆண்ஊழியர்களின் கழிப்பறை புதுப்பித்தலுக்கு ரூ 25ஆயிரம் என மொத்தம் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் உதவிகள்வழங்கப்பட்டது. எல்.ஐ.சி. கிளை எண் 24ன் மேலாளர் ஏ.சுரேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் மு.அமுதா, சங்கத்தின் தலைவர் கே.மனோகரன், பொதுச்செயலாளர்ஆர்.சர்வமங்களா,துணைத்தலைவர்வி.ஜானகிராமன்,இணைச்செயலாளர் வி.அனுஜா,வீணா,லதாமகேஸ்வரி,சிரிஷா.உதவிதலைமைஆசிரியர்.பர்ஹானாஜகிருல்லாம மற்றும் ஆசிரியர்கள்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவிகளும், ஆசிரியர்களும்
சங்க நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.