fbpx
Others

ராகுல் காந்திக்கு சிக்கலை ஏற்படுத்திய பாஜக எம்பி அனுராக் தாகூர் …..

லோக்சபாவில் நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது கடந்த 20ம் தேதி டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளைRahul Gandhi on NEET protest Rahul Gandhi Amit Shah neet முன்வைத்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது: ”டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளின் காயங்கள் உள்ளன. போலீசார் மற்றும் அதிவிரைவு படையில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி உள்ளனர். மின்சாரம் பாய்ச்சிய மற்றும் ஆணியுடன் கூடிய லத்திகளை பயன்படுத்தி உள்ளனர். மாணவர்கள் மீதான இந்த அடக்குமுறையை மத்திய உள்துறை அமைச்சருக்கு (அமித்ஷா) தெரியாவிட்டால் அவர் திறமையற்றவர். தெரிந்திருந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அவர் குற்றவாளி. மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூட நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது ” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.வினாத்தாள் கசிவில் தொடர்புடையவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள்தடுத்தல்)திருத்தமசோதா2026லோக்சபா,ராஜ்யசபாவில்நிறைவேற்றப்பட்டது.மேலும் முட்டாள்கள், குருட்டு விசுவாசிகள் போன்ற வார்த்தைகளை ராகுல் காந்தி பயன்படுத்தி விமர்சனம் செய்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் ராகுல் காந்தியிடம் கூறினர். ஆனால் ராகுல் காந்தி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.இந்நிலையில் தான் தேர்வு வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மீதான விவாதத்தின்போது லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி சபையில் பேச தடை விதிக்கப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை கோரியும் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பாஜக எம்பி அனுராக் தாகூர் சார்பில் ராகுல் காந்திக்கு எதிராக ‘சபை உரிமை மீறல்’ மற்றும் ‘சபையை அவமதித்தல்’ உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நடவடிக்கை கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் என்பது லோக்சபா நடைமுறை விதிகளின் விதி 222 மற்றும் 223 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் ராகுல் காந்தி தனது உரையின்போது முட்டாள்கள், குருட்டு விசுவாசிகள் போன்ற நாடாளுமன்ற மரபில் பேசக்கூடாத வார்த்தைகளை பேசி உள்ளார். நாடாளுமன்ற சபையில் ஒரு தரப்பினரை முட்டாள்கள், குருட்டு விசுவாசிகள் என்று குறிப்பிட முடியாது. இது அவமதிப்புக்குரியது. இழிவானதுஎன்பதோடு நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் குறைத்து சபையை rahul gandhi anurag thakur parliamentஅவமதிப்பு செய்யும் செயலாகும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது ராகுல் காந்தி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விதி 353-ன் கீழ் முன்கூட்டியே அறிவிப்பு வழங்காமல் இருந்ததோடு, குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள், ஆவணங்களை வழங்கவில்லை. . அதேபோல் ராகுல் காந்தி தன்னை தானே சுட்டிக்காட்டி பேசி உள்ளார். இது நேரடியாக விதி 352யை மீறுகிறது. ராகுல்காந்தி இப்படி நடந்து கொள்வது இது முதல் முறையல்ல. இவர் ஏற்கனவே இதுபோன்று விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளார். இதனால் ராகுல் காந்தி இருசபைகளிலும், மத்திய உள்துறை அமைச்சரிடமும் மன்னிப்பு கோர வேண்டும். இதுபற்றி உரிமைக்குழு விசாரிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இது ராகுல் காந்திக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close