Others

நிலுவையில் உள்ள நிதி பற்றி பேசிய முதல்வர் விஜய்….

CM VijayPrime Minister Narendra Modiபூந்தமல்லி – வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். பிறகு, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்த பிறகு நடைபெற்றநிகழ்வில்முதல்வர்விஜய்,பிரதமர்மோடிஆகியோர்பேசியிருக்கிறார்கள்.முதல்வர் விஜய், “தமிழ்நாடு பல்வேறு பண்பாடுகளைக் கொண்டது. அதை இன்று வரை பேணிப் பாதுகாத்து வருகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படையில் நமது அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.கல்வி, சுகாதாரம், வேளாண் வளர்ச்சி என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து நம் மாநிலம் பங்களித்து வருகிறது.ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, அதன் பலன் நேரடியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை. இளைஞர்கள் நமது மிகப்பெரிய பலம். அவர்களின் தொழில்நுட்ப அறிவு, புதுமைச் சிந்தனை ஆகியவற்றை உலகளவிலான வாய்ப்புகளுடன் இணைப்பதே நமது இலக்கு.சென்னை மெட்ரோ ரயிலின் முதற்கட்டத்தில் 54 கிலோமீட்டர் தொலைவிலான ரயில் பாதை பயன்பாட்டில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டத்தின் தடம்-4ல் பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் வழித்தடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகரத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், பொதுப் போக்குவரத்தைப் பலப்படுத்தவும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.அதன்படி, விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை, பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை மற்றும் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை எனச்சுமார்65கிலோமீட்டர்தொலைவிலானமூன்றாம்கட்டத்திட்டத்திற்குமத்தியஅரசுவிரைந்துஒப்புதல்அளிக்கவேண்டும்எனக்கேட்டுக்கொள்கிறேன்  இதேபோன்று, தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களின் எதிர்கால வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த முன்மொழிவை மாண்புமிகு பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.மேலும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் ஓசூரில் இருந்து கர்நாடகாவின் பொம்மசந்திராவரையிலானமாநிலங்களுக்குஇடையேயானமெட்ரோரயில்திட்டத்திற்கும்ஒப்புதல்அளிக்குமாறுகேட்டுக்கொள்கிறேன்.மேலும்,மத்தியஅரசுஉடனடியாகச்செயல்படுத்தப்பட வேண்டிய சில முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை இங்குச்சுட்டிக்காட்டவிரும்புகிறேன். ஜி.எஸ்.டி சாலையில் செங்கல்பட்டு – திருச்சி பிரிவு, NH81 சாலையில் திருச்சி – பஞ்சப்பூர் – ஜெயங்கொண்டம் – கரூர் பிரிவு, கரூர் கோயம்புத்தூர்பிரிவுஆகியவற்றை6வழிச்சாலைகளாக விரிவாக்கம்செய்வதுடன்,NH87சாலையில்மாதவரம்முதல்சோழவரம்வரைஉயர்மட்டச்சாலைஅமைக்கும்திட்டமும்இதில்அடங்கும்.இத்திட்டங்களுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிச் செயல்படுத்துவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய ஆதரவாக அமையும். இவற்றுடன்,மாண்புமிகுபிரதமரின்கவனத்திற்குமேலும்சிலமுக்கியகோரிக்கைகளையும்முன்வைக்கின்றேன்.மாநிலங்களுக்குஇடையேநீர்சமநிலையைக்கொண்டுவரநதிகள்இணைப்புமிகமிகஅவசியமாகும்தென்னிந்தியமாநிலங்களில்நீர்வளத்தைப்பெருக்குவதற்குகோதாவரிகாவிரிஇணைப்புத்திட்டம்ஒருபொன்னானவாய்ப்பாகும்.எனவே,மத்தியஅரசுஇத்திட்டத்திற்குமுதன்மைமுன்னுரிமைஅளித்து,தேசியத்திட்டமாகஏற்றுச்செயல்படுத்தவேண்டும்.மாண்புமிகு சென்னைஉயர்நீதிமன்றத்தின்வழக்காடுமொழியாகதமிழைப்பயன்படுத்தஒப்புதல்அளிக்கக்கோரிதமிழ்நாடுசட்டப்பேரவையில்அண்மையில்தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.மாண்புமிகுகுடியரசுத்தலைவரின்ஒப்புதலைப்பெறுவதற்காகஇந்தமுன்மொழிவுஅனுப்பிவைக்கப்பட்டுள்ளது.எனவே,உயர்நீதிமன்றத்தில்தமிழ்மொழியைப்பயன்படுத்தவழிவகைசெய்யும்வகையில்,இதற்குவிரைந்துஒப்புதல்அளிக்கவேண்டும்எனக்கேட்டுக்கொள்கிறேன்.அதேபோல், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய மத்திய அரசின்பங்கானரூ.5,110கோடிநிலுவையில்உள்ளது.எந்தவிதநிபந்தனைகளுமின்றிஇந்தத்தொகையைமத்தியஅரசுஉடனடியாகவிடுவிக்கவேண்டும்எனக்கேட்டுக்கொள்கிறேன்” என முதல்வர் விஜய் பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close