சர்வதேச சிலம்ப போட்டி மலேசியவில் நடைபெற்ற—சிறப்பு செய்தி
மலேசியாவில் சர்வதேச சிலம்ப போட்டி மலேசியநடைபெற்றது.சர்வதேசசிலம்பபோர்க்கலை
சார்பில் நடக்கும் இப்போட்டியில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இந்தோனேசியா, சிங்கப்பூர், வியட்நாம், நேபால், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் கலந்துகொண்டனர். அதில் இந்தியா தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இயங்கிவரும் சேப்பா அகாடமி சார்பில் டாக்டர் மாஸ்டர் ராஜா மற்றும் டாக்டர் மாஸ்டர் சங்கீதா ஆகியோர் தலைமையில் சிலம்ப வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றனர்.அதில் நான்கு தங்கப்பதக்கம், மூன்று வெள்ளி பதக்கம், இரண்டு வெண்கல பதக்கங்களை வெற்றி பெற்று சாதனை படைத்தனர். பின்னர் சென்னை திரும்பிய சாதனை படைத்த சிலம்ப வீரர்களை பெற்றோர்கள் ,சகமாஸ்டர்கள் உற்சாகமாக வரவேற்று இனிப்புகளை வழங்கி வாழ்த்தினர்.இதில் மூத்த சிலம்பம் மாஸ்டர் முருக்கனி உள்ளிட்ட சிலம்ப மாணவர்கள் உடனிருந்தனர்.