கூரியர் சேவை நிறுவன நிர்வாகிளுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்பு உணர்வு கூட்டம்….
செங்குன்றம்,ஜூலை 30: ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட கூரியர் சேவை நிறுவன நிர்வாகிளுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்பு உணர்வு கூட்டம் ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் ஆணைக்கிணங்க, இணை ஆணையாளர் மருத்துவர் ஆர்.சிவகுமார், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் செங்குன்றம் காவல் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் செங்குன்றம் புள்ளிலைன் எஸ்எஸ்ஆர் பேலஸில் செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் பிராங்க் டி ரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் பொழுது, மும்பையிலிருந்து ஒரு சிலருக்கு அடிக்கடி போதை மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் பார்சலில் வருவதாக தெரிய வருகின்றது. அதை கண்காணித்து போதைப் பொருள்கள் தமிழ்நாட்டில் நுழைய கூடாது என்று பல்வேறு முயற்சிகளை டிஜிபி அவர்கள் எடுத்து வருகின்றார். அதன் ஒருபகுதியாக இங்கு வருகை தந்துள்ள அனைவரும் சந்தேகப்படியானபார்சல்,போதைப்பொருள்கள்எதுவும்பார்சலில்வருகின்றதாஎன்பதைகண்காணிக்கவேண்டும்.அவ்வாறுசந்தேகப்படியான பார்சல்கள் எதுவும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும், சந்தேகப்படியான நபர்களுக்கு அடிக்கடி பார்சல்கள் வந்தால் அது குறித்தும் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.காவல் ஆய்வாளர்கள் மணலி புதுநகர் புருசோத்தமன், திருப்பாலைவனம் அகிலன்ராஜ், காட்டூர் தங்க விஜயகுமார், பொன்னேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட செங்குன்றம், சோழவரம், பொன்னேரி, மணலி, மீஞ்சூர், காட்டூர், மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூரியர், பார்சல் சர்வீஸ் நிறுவன நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுதங்களதுகருத்துகளைபரிமாறிக்கொண்டனர்.இதில்உதவிஆய்வாளர்கள்,காவலர்கள்கலந்துகொண்டனர்.செங்குன்றம் குற்றவியல் ஆய்வாளர் பரிபூரணம்அனைவருக்கும் நன்றி நவின்றார்.