Others
காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிநடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்ததினவிழா விளையாட்டு போட்டியில் காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி பச்சையப்பன் மேல் நிலை பள்ளி திடலில் நடந்தது. மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிநடத்தப்பட்டது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர். முத்துவேல் போட்டியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர். முத்துராமன்ஜி தலைமையில் செயல்பட்டுவரும் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர். லட்சுமணன் மற்றும் நடுவர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து போட்டியை நடத்தினர்.