fbpx
Others

கோவை-புஞ்சைபுளியம்பட்டியில் வாகனம் மோதி தொழிலாளி சாவு…

புஞ்சைபுளியம்பட்டி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பழனி (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் செட்டிக்குட்டை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பழனி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close