REஇந்தியா

கொரோனா நோயாளிகளுக்கு யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்யக்கூடாது:மத்திய அரசு!!

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல என்றும்,

இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது என்றும்,

இது தொடர்பாக முடிவுகள் வரும் வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிகை விடுத்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டரும் பயனளிக்காமல் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதனால் சிகிச்சை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில்,

வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தை தானமாகப் பெற்று,

அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

சில மாநிலங்களில் இந்த சிகிச்சை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் டெல்லி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தனர்.

தமிழகம் உட்பட சில மாநிலங்கள் இந்த சிகிச்சைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் அனுமதியும் கோரியுள்ளன.

 

இந்நிலையில் தான்  பிளாஸ்மா சிகிச்சையை யாரும் செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை திடீரென இவ்வாறு எச்சரித்துள்ளது.

அனுமதியும் கொடுத்துவிட்டு பிறகு செய்ய வேண்டாம் என்று கூறுவது டாக்டர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close