செங்குன்றம்– 6 புதிய வகுப்பறைகள்அடிக்கல் நாட்டு விழா…
கே.பி.சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது!தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் செங்குன்றம் பனையத்தம்மன் தெருவில் அமைந்துள்ள கே.பி.சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம். எஸ்.சுதர்சனம் தலைமை ஏற்றுஅடிக்கல்நாட்டிதுவக்கிவைத்தார்.இதில் கே. பி. சி.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்.எம். அமுதா, செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத்தலைவர் ஆர்.இ.ஆர். விப்ரநாராயணன், முன்னாள் துணைத் தலைவர் இரா.ஏ. பாபு, பேரூராட்சி கவுன்சிலர்கள் என்எம்டி. இளங்கோவன், கே.கே ராமன், வினோதினி பாலாஜி, கு.மோகன், மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.