REஉலகம்

கொரோனா வைரசால் பாதிப்பு 25 லட்சம்;உலக நாடுகள் அதிர்ச்சி!

ஜெனிவா:

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்கியுள்ளதால் உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளன.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி மிகப்பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாட்டு விஞ்ஞானிகளும்  தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் தன்மையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 24 லட்சத்து 4 ஆயிரத்து 818 பேருக்கு வைரஸ் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 16 லட்சத்து 15 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 225 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது அதனால் இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 24 ஆயிரத்து 849 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 922 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் அமெரிக்கர்கள் அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள் வருமாறு:-

அமெரிக்கா – 7,63,579,

ஸ்பெயின் – 1,98,674,

இத்தாலி – 1,78,972,

பிரான்ஸ் – 1,52,894,

ஜெர்மனி – 1,45,184,

இங்கிலாந்து – 1,20,067,

துருக்கி – 86,306,

சீனா – 82,735,

ஈரான் – 82,211,

ரஷியா – 42,853,

பிரேசில் – 38,654,

பெல்ஜியம் – 38,496,

கனடா – 35,056,

இந்தியா-17265.

Related Articles

Back to top button
Close
Close