RETamil Newsஇந்தியா

ஆந்திராவில் ஒரே எம்.பி குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு – கொரோனா பாதிப்பு உறுதி

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றானது ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான ஒய்.எஸ் .ஆர் கட்சியை சேர்ந்த எம்.பி.டாக்டர் சஞ்சீவ் குமார் குடும்பத்தை பெரிதும் பாதித்துள்ளது.

.இவருடைய வீடு கர்னுல் மாவட்டத்தில் உள்ளது. இவருடைய குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.இவர்களில் எம் பியின் சகோதரரும் அடங்குவார். பாதிக்கப்பட்ட 6 பேரும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களின் உடல் நிலை சீராக இருக்கும் தகவலை சஞ்சீவ் குமார் எம் பி நிபுணர்களுக்கு தெரிவித்தார்.

கர்னுல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

இத்துடன் சேர்த்து கர்னுல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 292-ஆக அதிகரித்துள்ளது.ஆந்திர மாநிலத்திலேயே இந்த மாவட்டத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கர்னுல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 சிறப்பு கொரோனா ஆஸ்பத்திரிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 252 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 7 நபர்கள் டாக்டர்களும் ஆவார்.அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். கர்னுல் மாவட்டத்தில் நிலைமை மோசமடைந்ததால் முதன்மை செயலாளர் அஜய் ஜெயின் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close