fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

கடத்தப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர் முகம்மது யாசீன் பாதுகாப்பாக இருக்கிறார் – பாதுகாப்புத்துறை

ஜம்மு காஷ்மீரில் கடத்தப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர் முகம்மது யாசீன் பாதுகாப்பாக இருக்கிறார். பயங்கரவாதிகள் அவரை கடத்தியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து, காஷ்மீரில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. ஜம்மு நகரில் உள்ள பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் குண்டு வெடித்ததில் 2 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

மேலும் முகம்மது யாசீன் இந்திய ராணுவத்தின் ஜாக்ளி என்ற படைப்பிரிவில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையை கழிப்பதற்காக காஷ்மீர் புட்காமில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த முகமது யாசின் என்ற ராணுவ வீரரை நேற்று மாலை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக தகவல் வெளியானது. இதனால், ஜம்முகாஷ்மீரில் மீண்டும் பதற்றம் நிலவியது.

ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ராணுவ வீரர் முகமது யாசின் கடத்தப்பட்டாரா, இல்லையா, அப்படி கடத்தப்பட்டிருந்தால் எதற்காக கடத்தப்பட்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். ராணுவ வீரர் முகமது யாசீனை, பயங்கரவாதிகள் வீடு புகுந்து கடத்தப்பட்டதாக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தவறானது. அவர் பாதுகாப்பாக இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்ற யூகங்களை தயவு செய்து தவிருங்கள் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close