fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

கொரோனா 60000…..! கணிக்க முடியாத பாதிப்பு… கவலையில் இந்தியா..!

Corona cases nearing 60000 in india

டெல்லி:  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60000ஐ நெருங்கி விட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

ஆனாலும் பாதிப்பு குறையவில்லை. இன்று காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,342லிருந்து 59,662 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886லிருந்து 1,981 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,540லிருந்து 17,847 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 19,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 731 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட, 95 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close