சுவையான அருமையான மாங்காய் பச்சடி செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்:
1. பெரிய மாங்காய் ஒன்று
2. வெள்ளம் 500கி
3. கடுகு 1/2 தேக்கரண்டி
4. உளுந்து, சீரகம் 1/2 தேக்கரண்டி
5. எண்ணெய் தேவைக்கேற்ப
6. உப்பு தேவியான அளவு
7. காய்ந்த மிளகாய்
செய்முறை:
மங்காவை தோல் சீவி கொள்ளவேண்டும். பிறகு அதனை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். நறுக்கின மங்காவை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்து கொள்ளவும். தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்து கொண்டு அதில் வெல்லத்தை போட்டு அடுப்பினில் சிறிய தீயில் வைத்து கரைத்து கொள்ளவும். வெள்ளத்தினை வடிகட்டி வைத்து கொள்ளவும்.
வேக வைத்த மங்காவில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
இரண்டும் நன்றாக மசிந்த நிலையில் இருக்கும் போது, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து கிளறி இரக்கி பரிமாறலாம்.
இப்போது சுவையான புளிப்பும் இனிப்பும் சேர்ந்த மாங்காய் பச்சடி தயார்!