fbpx
Tamil NewsTechnology

இதுவரை நாம் அறியாத சில அருமையான தகவல்கள் இதோ!

அருமையான தகவல் 1.:

 

20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆப்பிள் பழங்கள் மக்களால் சாப்பிடப்படவில்லை. மாறாக அவை மதுபானங்கள் தயாரிப்பதில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்டன.

1900 -ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மக்கள்(குறிப்பாக ஆண்கள்) தண்ணீரைப் பருகினர். மற்ற நேரமெல்லாம் மது மட்டுமெ அவர்கள் விரும்பி அருந்திய பானமாக இருந்திருக்கிறது. இதனால் அதிகம் அடிவாங்கி பாதிக்கப்பட்டது பெண்களும் குழந்தைகளும் தான். இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற விரும்பிய Women’s Christian Temperance Union போன்ற அமைப்புகள், ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், ஆப்பிளை மது தயாரிப்பதில் பயன்படுத்தக்கூடாது என்றும் மக்களிடையே பிரச்சாரம் செய்யத்தொடங்கினர். இப்படியான பிரச்சாரங்களால் மதுபானக்களில் கலக்கப்பட்ட ஆப்பிள்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

ஆப்பிள் தோட்டங்களை வைத்திருந்தவர்கள் இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய தங்களின் விற்பனை ஸ்டாடர்ஜியை “An Apple A Day keeps The Doctors Away” என்று மாற்றியமைத்து வெற்றிபெற்றனர்.

அருமையான தகவல் 2.:

நாம் சிரிக்கும் போது எவ்வளவு கலோரிகள் செலவு செய்யப்படுகின்றனவோ அதே அளவு கலோரிகள் நாம் அழும் போதும் நம் உடலிலிருந்து செலவு செய்யப்படுகின்றன. அழுகையை அடக்குவதால் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்பட்டு உடல் எடை கூடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். நம் கண்ணீர் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும், இதிலும் 3 வகைகள் இருக்கின்றன.

பேசல் டியர்ஸ் (Basal tears) – அடிப்படை கண்ணீர் – நம் கண்களை எப்போதும் ஈரப்பசையுடன் வைக்க உதவுகிறது.

ரிஃப்ளெக்ஸிவ் டியர்ஸ் ( Reflexive tears) – எதிர்வினைக் கண்ணீர் – கண்களில் தூசு விழும்போது, வெங்காயம் நறுக்கும்போது, இருமும்போதும், தும்மும்போதும் வரும் கண்ணீர்.

ப்சைக் டியர்ஸ் (Psych tears) – உணர்வுசார் கண்ணீர் – பெயரிலிருந்தே தெரிந்திருக்குமே. கோபம், மன அழுத்தம், பயம், துக்கம் இவை மட்டுமல்ல. அளவுகடந்த சந்தோஷத்தாலும் வரும் கண்ணீர். இந்த வகைக் கண்ணீர், மன அழுத்தத்தாலும் கவலையினாலும் நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. உணர்வுசார் கண்ணீர், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அழுது முடித்தவுடன் புத்துணர்ச்சியுடனும் லேசான மனதுடனும் இருக்க இதுவே காரணம்.

Related Articles

Back to top button
Close
Close