கோவையில் இரண்டுலட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் ! இருவர் கைது .
கோவை மாவட்டம், ஒத்தக்கல்மண்டபம் வழியாக தடைசெய்யப்பட்டகுட்காபொருட்கள்எடுத்துச்செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணசுந்தர் மற்றும் உளவுத்துறையினர், சுந்தராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், ஒத்தக்கல்மண்டபம் பகுதியில் சுந்தராபுரம் காவல் ஆய்வாளர் வினோத்குமார் உள்ளீட்ட காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது TN39CF8626, TN66C9032 என்ற எண்கொண்ட இரு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்துள்ளது. அதை பறிமுதல் செய்த போலிசார் காரை ஓட்டி வந்த இருவரையும் விசாரனைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். விசாரனையில் திருப்பூரை சேர்ந்த முருகன் (45) மற்றும் சரவணன் (30) தெரியவந்தது. இது குறித்து சுந்தராபுரம் காவல் ஆய்வாளர் வினோத் குமார் கூறுகையில் இரண்டுலட்சம் மதிப்பிலான 210 கிலோ குட்கா பிடித்துள்ளதாகவும், இருவரும் திருப்பூர் மற்றும் கோவையில் பல்வேறு இடங்களுக்கு குட்கா சப்லேசெய்வதற்காகஎடுத்துவந்ததாகவும். இருவர் மீது பல வழக்குகள் நிலுவயில் இருப்பதாகவும், இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தார்.