fbpx
Others

வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்.,வணிக சிலிண்டர்விலைஉயர்வு….?

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு: இன்று முதல் அமல் #LPGGasசமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ்சிலிண்டரின் விலையை மத்திய அரசு நள்ளிரவில் திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் 835 ரூபாய்க்கு விற்ற கியாஸ் சிலிண்டர் 913 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு இன்று  முதல் அமலுக்கு வந்தது. ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என கூறிய நிலையில், நள்ளிரவில் சிலிண்டர் விலையைமத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100குறைக்கப்பட்டது என்பது குறிக்கப்பட்டது.    வணிக பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.115 உயர்வு: மக்கள் அதிர்ச்சி #LPGGas மார்ச் மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 1-ம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுசிலிண்டரின் விலை ரூ.29.50 உயர்ந்து ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நள்ளிரவில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 115 ரூபாய்உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 1768.50 ரூபாய்க்கு விற்ற வணிக பயன்பாட்டு சிலிண்டர்1883ரூபாயாகஉயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 1929 ரூபாய்க்கு விற்கப்பட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் 2043.50 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டது. இதனால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வீட்டு உபயோக சிலிண்டர் 60 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலை 115 ரூபாய் அதிகரித்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close