fbpx
Others

சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ….

விடியல் பயணம் திட்டம் மூலம் 881 கோடி முறை மகளிர் பாதுகாப்பாக பயணம் - அமைச்சர் தங்கம் தென்னரசுஅமைச்சர் தங்கம் தென்னரசுதாக்கல் செய்தபோதுஅவர் கூறியதாவது:
பெண் ஓதுவார் நியமனம் தமிழக அரசின் மகத்தான சாதனை. * 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள்
அமைக்கப்பட்டுள்ளன. * தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டு பெண்கள்.ஏழை எளிய தாய்மார்களின் துயரை துடைக்கும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம். ரூ.1884 கோடியில் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறையில் உள்ளது.25 இடங்களில் மூத்த குடிமைக்களுக்காக அன்பு சோலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. * பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தில் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. * அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு, பணி உயர்விலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் மிகவும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.1,471 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * நாட்டிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்குஉள்ளாட்சிஅமைப்புகளில்பிரதிநிதித்துவம்அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கும் ரூ.5,463 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * TNWESafe தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு  பாதுகாப்பு திட்டம். * மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் தென் தமிழ்நாட்டில் அறிவாலயமாக உள்ளது.பள்ளிக்கல்வித்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,171 கோடி மதிப்பீட்டில் மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளன. * சேலம், கோவை, நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த5ஆண்டுகளில்38அரசுகலை,அறிவியல்கல்லூரிகள்புதிதாகஅமைக்கப்பட்டுள்ளன.உயர்கல்வித்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8,505 கோடி ஒதுக்கீடு * உயர்கல்வியில் தேசிய சராசரியை விட 47% என்ற அளவில் தமிழகம் முதலிடம்.முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன்திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது. * குடிமைப் பணித் தேர்வுகளில் வென்ற 59 பேரில் 52 பேர் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. * குடிமைப் பணித் தேர்வுகளில் வென்ற 59 பேரில் 52 பேர் நான் முதல்வன் திட்ட பயனாளிகள்.சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.17,088 கோடி ஒதுக்கீடு * மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும்புதுமைப்பெண்கள் திட்டத்தில் 6.95 லட்சம் கல்லூரி மாணவிகள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close