fbpx
Others

அண்ணாமலை–பாஜகவின் சுற்றுப்பயணபொறுப்பு வேண்டாம்…

பேசாம கட்சியை விட்டு போயிடுங்க." டெல்லியில் அண்ணாமலைக்கு செக்.?! - Tamil  Sparkதமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.  அந்த வகையில் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், பாஜக தமிழகத்தை குறிவைத்து களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் 234 தொகுதிகளிலும் தலைவர்களின் சுற்றுப்பயணத்துக்கு பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக 72 பொறுப்பாளர்களை நியமித்தது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர்களான அண்ணாமலை, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, உள்ளிட்டவர்கள் இடம்பிடித்திருந்தனர். இவர்களுக்கு தலா 4 தொகுதிகள் முதல் 6 தொகுதிகள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர். இதன்படி சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து இந்த பொறுப்பை அண்ணாமலை வேண்டாம் என நிராகரித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம்பேசியஅண்ணாமலை, தனது தந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. டயாலிஸ் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இது தான் எனது முதல் கடமை. இதன்காரணமாகஅதிகளவுஎன்னால்சுற்றுப்பயணம் செய்ய முடியாது. எனவே பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளேன். எனது கருத்தை தலைமையிடம் தெரிவித்துள்ளேன். எனவே எனக்கு பதிலாக புதிய பொறுப்பாளரை பாஜக தலைமை நியமிக்கும்.

Related Articles

Back to top button
Close
Close