fbpx
Others

தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் 2 நாள்கள் சுற்றுப் பயணம்இன்று நெல்லை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.! மேற்கொள்ளவுள்ளார். திருச்சி சாலையில் உள்ள பாலன் நகர் பள்ளத்திவயல் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரப் பயணத்தில் நிறைவுவிழாவில்அமித்ஷாபங்கேற்றுஉரையாற்றவுள்ளார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்தமானில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வருகை தரவுள்ளார். பிரசாரப் பயணத்தில் பங்கேற்றுவிட்டு சாலை வழியாக திருச்சிக்கு வரும் அவர் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் பாஜக மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம், தமிழக அரசியலின் தற்போதைய நிலை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமித்ஷாவின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பின்னர், இரவு அந்த விடுதியிலேயே தங்கவுள்ளார். 2 ஆம் நாளான திங்கள்கிழமை காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். அதைத்தொடர்ந்து, மன்னார்புரத்தில் நடைபெறவுள்ள மோடி பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ளார்.பிற்பகல் 1.20 மணிக்கு கார் மூலமாக திருச்சி விமான நிலையத்துக்குச் சென்று டெல்லிக்கு புறப்படவுள்ளார். அமித்ஷா வருகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.மத்திய உள்துறை அமைச்சர் வருகையையொட்டி, திருச்சி, புதுக்கோட்டையில் அவர் பயணம் செய்யும் சாலை வழிகள், விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close