ரஷிய அதிபர் புதினை கரடி என்று பேசிய டிரம்ப்…
உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷிய அதிபர் புதினை இதுவரை மென்மையாகக் கையாண்டு வந்த டிரம்ப், சமீபத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், ரஷியா ஒரு காகிதப் புலி என்றும் இழக்கப்பட்ட போரை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். ரஷியாவால் போரை விரைவாக வெல்ல முடியவில்லை என்றும் கேலி செய்த டிரம்ப், உக்ரைன் தனது இழந்த பகுதிகள் அனைத்தையும் ரஷிய படைகளிடம் இருந்து மீட்க முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். மேலும்,”புதினும் ரஷியாவும்பெரும்பொருளாதாரச்சிக்கலில்உள்ளனர்;உக்ரைன்செயல்படஇதுவேசரியானநேரம்”என்றும்டிரம்ப்கூறியிருந்தார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஆர்.பி.சி.வானொலியில்பேசுகையில்,”ரஷ்யாஒருபோதும்புலிஅல்ல.அதுபாரம்பரியமாகவே கரடியாகபார்க்கப்படுகிறது. காகிதத்தால் ஆன கரடி என்று ஒன்று இல்லை. ரஷியா ஒரு உண்மையான கரடி… அதில் காகிதம் என்றபேச்சுக்கேஇடமில்லை”என்றுதெரிவித்தார்மேலும், 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து மேற்குலக நாடுகள் விதித்த தடைகள் காரணமாக சிலபதட்டங்கள் இருந்தாலும், ரஷியா பொருளாதார நிலைத்தன்மையுடன் நீடிப்பதாகவும் பெஸ்கோவ் தெரிவித்தார்.