போடிநாயக்கனூர் வட்ட சட்ட பணிகள் குழு–சிறப்பு செய்தி
போடிநாயக்கனூர் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக 13.09.2025ம் தேதி நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான திரு. M. செய்யது சுலைமான் உசேன்., L.L.M., அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் போடிநாயக்கனூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு.M. நல்ல கண்ணன்., B.Com.,B.L., மற்றும் போடிநாயக்கனூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி A. முகமது ஹாசிம்., B.A.,B L., ஆகிய இருவரும் அமர்வு நீதிபதியாக செயல்பட்டனர். போடிநாயக்கனூர் அனைத்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தலைமை தாங்கினர். இந்நிகழ்ச்சிக்கு உறுப்பினராக திரு. S. சத்திய பாமா, M.A.B.L., ‘ஆ’ பட்டியல் வழக்கறிஞர் பணி செய்தார். இறுதியில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் மொத்தம் 347 வழக்குகள் முடிக்கப்பட்டு மொத்த தொகை ரூ. 26,15,155/- ஆகும். இந்த நிகழ்ச்சியை PLV M. சையது அப்தாகிர் , V. விக்னேஸ்வரன் ஆகியோர்கள் ஏற்பாடு செய்தனர்.