fbpx
Others

செங்கோட்டையன் ஆதரவாளர்கள்கோபியில் திரளுவதால் பரபரப்பு….?

Atal tinkering labs at 500 schools in Tamil Nadu: Minister | Education ...கோபி​யில் கட்​சி​யினருடன் ஆலோ​சனை நடத்​திய அதி​முகமூத்ததலைவர்செங்கோட்டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவ​தாக அறி​வித்​திருந்தார். இது அதி​முக வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலைமுதல்கோபியில்உள்ளகோபிசட்டமன்றதொகுதிஅலுவலகத்தில்அவர்இன்றுமுக்கியஅறிவிப்பைவெளியிடுவதற்கானஏற்பாடுகள்நடைபெற்றுவருகிறது.அவரதுபேச்சைஒளிபரப்ப அலுவலகத்துக்கு வெளியே பெரிய திரை வைக்கப்பட்டுள்ளது. கட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அவரது தொகுதி மக்களும் கூட ஷேர் ஆட்டோக்கள் மூலம் நிகழ்விடத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.அத்​திக்​கட​வு – அ​வி​நாசி திட்ட கூட்டமைப்பு சார்​பில் கடந்த பிப்​ர​வரி மாதம் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு அன்​னூரில் நடந்த பாராட்டு விழா​வில் எம்​ஜிஆர், ஜெயலலிதா படங்​கள் இடம்​பெறாததைக் கண்​டித்​து, முன்​னாள் அமைச்​சரும், கோபி தொகுதி எம்​எல்​ஏவு​மான கே.ஏ.செங்​கோட்​டையன் விழாவைப் புறக்​கணித்​தார். தொடர்ந்​து, பழனி​சாமி​யின் பெயரை தவிர்த்து செங்​கோட்​டையன் பேசி​யது, அவரது அதிருப்​தியை வெளிப்​படுத்​தி​யது. எனினும், அவரை சமா​தானப்​படுத்த கட்​சித் தலைமை எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.இந்​நிலை​யில், சில நாட்களுக்கு முன்னர் கோபி​யில் உள்ள தனது வீட்​டில் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த செங்​கோட்​டையன், “கோபி​யில் வரும் 5-ம் தேதி காலை செய்​தி​யாளர்களை சந்​தித்து மனம் திறந்து பேச உள்​ளேன். அது​வரை பொறுமை காக்க வேண்​டும்” என்​றார்.செங்​கோட்​டையனுக்​கும் அதி​முக தலை​மைக்​கும் இடையே ஏற்​பட்​டுள்ள முரண்​பாட்​டுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​காத​தால், கடந்த 6 மாதங்​களாக பல்​வேறு வதந்​தி​கள் சமூக ஊடகங்​களில் பரவி வரு​கின்​றன. இதில், செங்​கோட்​டையன் அதி​முக​வில் இருந்து வில​கி, திமுக​வில் இணைய உள்​ளார் என்ற வதந்​தி​யும் ஒன்​றாகும். இந்​நிலை​யில், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேச உள்​ள​தாக செங்​கோட்​டையன் அறி​வித்​தது அதிமுக வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தியது.

Related Articles

Back to top button
Close
Close