‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்தன பொதுமக்கள்அதிர்ச்சி…..
தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்’ நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவைக்கு பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர். இந்த மனுக்களுக்கு 45நாட்களுக்குள் தீர்வுகாணப்படும்எனமுதல்வர்அறிவித்திருந்தார். அதன்படி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில்பூவந்தி,கீழடி,கொந்தகை,நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உங்களுடன் ‘ஸ்டாலின்திட்டமுகாம்கள்’நடைபெற்றன.இதில்பலஆயிரம்பேர்மனுக்கள்கொடுத்தனர். இந்நிலையில் நேற்று திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக்என்பவர்அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மேலும் அந்த மனுக்களில் பெரும்பாலும் பட்டா மாற்றத்துக்காக வழங்கப்பட்டவை. அங்கு வந்த போலீஸார் மனுக்களை சேகரித்து விசாரிக்கின்றனர். மனுக்களைஆற்றில்தூக்கிஎறிந்தசம்பவம்பொதுமக்கள்இடையேஅதிர்ச்சியைஏற்படுத்தியது.இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆற்றில் மிதந்த மனுக்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டவை. மனுக்கள் எப்படி ஆற்றில் மிதந்தன என்பது குறித்து விசாரிக்கிறோம், என்றனர்.