Others
ஏர்போர்ட் அருகே பலூன், லேசர் ஒளி பயன்படுத்த தடை!

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள், லேசர் ஒளிபயன்படுத்தத்தடைவிதிக்கப்பட்டுள்ளது.கட்டுப் பாடுகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த சில விமானங்களின் மீது சமீபகாலமாக இரவு நேரத்தில் லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.