கோவையில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது …
கோவை., மார்., 03 :
கல்லூரி மாணவர்களிடமிருந்து 6 லட்சம் மதிப்புள்ள 69 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல். இது குறித்து மாநகர போலீசார் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்து கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா என்னும் போதைபொருள் பழக்கம் இருப்பதை கண்டு கோவை மாநகரகாவல்துறையினர் உரிய வழக்குகள் பதிவு செய்து கஞ்சா எங்கிருந்து வருகின்றது என விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் கைதுசெய்தனர்.
இந்நிலையில்சமீபகாலமாககல்லூரிமாணவர்களிடையே சிந்தடிக் டிரக் எனப்படும் மெத்தபெட்டமைன் LSD போன்ற போதைப் பொருள்கள் மாணவர்களிடையே புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கோவை மாநகர காவல் ஆணையர் சரவணன்சுந்தர் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துணைஆணையர்தேவநாதன்அவர்கள்மேற்பார்வையில் தனிப்படைஅமைக்கப்பட்டுவிசாரணைமேற்கொண்டதில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கோவைக்கு போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதும் இங்குள்ள கல்லூரி மாணவர்கள்மற்றும்தகவல்தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் பல்வேறு இளைஞர்கள் அதை பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது. பின்னர் தொடர் விசாரணையில் கடந்த 27.2.2025 ஆம் தேதி கோவை செட்டிபாளையத்தில் வசித்து வரும் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த மிதுன்ராஜ்(27) த/பெ சிவலிங்கம் என்பவர் கோவை மாநகர் சி2 பந்தயசாலை காவல் நிலைய எல்லை பந்தைய சாலைபகுதியில்மெத்தபெட்டமைன் என்னும் சிந்தடிக்ட் டிரக்கை இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் அவரை கைது செய்து அவரிடமிருந்து 50 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 7 கிராம் மெத்தபெட்டமைன் என்னும் போதைப்பொருள் செல்போன் ஒன்றும் கைப்பற்றிசி2பந்தயசாலை காவல்நிலையத்தில்வழக்குபதிவுசெய்துஅவரைநீதிமன்றகாவலுக்குஅனுப்பப்பட்டது.மேற்படி நபரிடம்மேற்கொண்ட விசாரணையில் இவர் பலகாலமாக மெத்தபெட்டமைனை பயன்படுத்தி வருவதாகவும் பெங்களூரில் வாங்கி வந்து இங்கே இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறினார். இவ்வழக்கில் கூட்டாளியாக பின்னர் இருந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் என்பவரும் காளப்பட்டியைச் சேர்ந்த கோகுல் என்பவரும் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் என்பவரை 28.02.2025 ஆம் தேதி கைது செய்து அவரிடமிருந்து 45 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 6 கிராம் மெத்தபெட்டமைனும், கார் ஒன்றும் செல்போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டும், பின்னர், கோவை காளப்பட்டியைச் சேர்ந்த கோகுல் (28) த/பெ மணி என்பவரை 02.03.2025 ஆம் தேதி கைது செய்து அவரிடமிருந்து 30 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 4 கிராம் மெத்தபெட்டமைன். இருசக்கர வாகனம் ஒன்றும் செல்போன்ஒன்றும்பறிமுதல்செய்யப்பட்டும்அவர்களைநீதிமன்றகாவலுக்குஉட்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், இன்று 03.03.2025ஆம் தேதி கொல்லத்தை சேர்ந்த அஸ்வின் (25), ரியாஸ் (32),
திருவனந்தபுரத்தை சேர்ந்த அமல் (24), பாலகாட்டை சேர்ந்த அப்துல்சலீம் (46), ஆலபுலாவை சேர்ந்த அன்சாத் (23) மற்றும் கூடலூரை சேர்ந்த அசாருதீன்(28) ஆகியோரை கோவையில் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் பெங்களூரில் தங்கி டெல்லி மற்றும்பெங்களூரைசேர்ந்தநபர்களிடம்சமூகவலைதளங்கள்மூலம்தொடர்புகொண்டுGPayமூலம்பணம்செலுத்திமெத்தபெட்டைமனை மொத்தமாக வாங்கி, அதனை பிரித்து பெங்களூரிலும் கோவை மாநகர் போன்ற பகுதிகளிலும் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. மேலும், மேற்படி நபர்களிடமிருந்து சுமார் 4லட்சம்மதிப்புள்ள53கிராம்மெத்தபெட்டமைனையும், 50ஆயிரம் மதிப்புள்ள 20 LSD ஸ்டாம்ப் சிந்தடிக் டிரக்-ஐயும், கார் ஒன்றையும் மற்றும் 7 செல்போன்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வழக்கில் மொத்தமாக சுமார் 6 லட்சம் மதிப்புள்ள 69 கிராம் மெத்தபெட்டமைன், 20 LSD ஸ்டாம்ப். இரண்டு கார்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புள்ள மற்ற நபர்களைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.