எச். ராஜா –சுந்தராபுரம் பகுதியில் 2025 – 2026 மத்திய பட்ஜெட் விளக்கம்
கோவை., பிப்., 16 :கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியில் 2025 – 2026 மத்திய
பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச். ராஜா தெரிவித்ததாவது, இந்த பட்ஜெட் கடைசி பந்தில் சிக்சர் அடித்தது போல வீரத்தமிழச்சி நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் அறிவுப்புகளை வெளியீட்டுள்ளதாகவும். குறிப்பாக மத்திய அரசுக்கு ஓரு லட்சம் கோடி வருமான இழப்பு இருந்தாலும், தனிநபர் வருமான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு 12 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பு மக்கள் பயனடைந்துள்ளனர். புதியதாக தொழில்துவங்கும் நிறுவனங்கள் வங்கிகளில் சொத்து ஈடு இல்லாமல் கடன்பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் விற்பனை வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வெள்ளளூர் குப்பைக்கிடங்கு சுற்றியுள்ள 20000 ஆயிரம் குடும்பங்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக அதை இடமாற்றம் செய்யப்பட வேண்டும். வெள்ளளூர் பேரூராட்சியை நகராட்சியாக மாற்றக்கூடாது, ஆனைமலை குண்டாறு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மும்மொழிக்கொள்கை எதிர்பவர்கள் அவர்களின் பிள்ளைகளை அரசுபள்ளிகளில் படிக்க வைப்பார்களா என்று கேள்விஎழுப்பினார். தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். தமிழகத்தின் வளர்சிக்கு மத்திய அரசு வழங்கும் நிதிகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதனை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ் தற்போது பேச்சுமொழியாக மட்டுமே இருந்துவருகிறது. இந்த தலைமுறை குழந்தைகள் பேச்சு தமிழாக மட்டுமே பயன்படுத்திவருவதாகவும், தமிழ் எழுத்து மொழிகளை மறந்துவிட்டனர். திமுகவை சேர்ந்த பலர் மும்மொழிக்கல்வி கொண்ட பள்ளிகளை நடத்திவருகிறார்கள். அந்த பள்ளிகளின் முன்பு சமச்சீர் கல்வி முறைக்கு மாற்ற வேண்டும் என்று தர்ணா செய்யப்படும். தமிழை எதிர்கும் அனைவரும் தமிழ் விரோதிகள் தான், கடந்த 2021 இல் தமிழகத்தில் கடன் 4இலட்சம் கோடியாக இருந்தது, தற்போது 9 இலட்சம் கோடியாக உள்ளது இதுதான் திராவிட மாடல் நிலை. உலக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வரபோகிறது, கோவையில் வங்கதேசத்தைச்சார்ந்த பலர் போலியாக ஆவணங்கள் தயாரித்து குடியிருந்து வருகிறார்கள்,2026 இல் தமிழகத்தில் பாஜக தான் ஆட்சிதான் அமைக்கும் இவ்வாறு அவர் பேசினார்