fbpx
Others

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்….8-வதுவார்டுகன்னிகாபுரம் பகுதியில்நடப்பதுஎன்ன.?

.கன்னிகாபுரம்கல்குவாரிகுட்டையில்மருத்துவக்கழிவுகள்மண்கொட்டிமூடப்பட்டுள்ளதுநிலத்த      நிலத்தடி           நீர் கெட்டுப் போனதால் பொதுமக்கள் அவதி        ஆற்காடுஊராட்சிஒன்றியம்….

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் பூட்டுத்தாக்கு ஊராட்சி 8-வதுவார்டு கன்னிகாபுரம் பகுதியின் அருகே உள்ள கல்குவாரி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அதே வார்டு உறுப்பினர் ஆர்.சுதாகர் என்பவர் சொந்த லாரியில் வேலூரிலலிருந்து குப்பைகளை ஏற்றி வந்து கல் குவாரி பள்ளத்தில் கொட்டி இரவோடு இரவாக மண் கொட்டி மூடியுள்ளார் இதனை அறிந்த அப்பகுதி குடியிருப்பு பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் அருணுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார் குப்பைகளை கொட்டி மண் போட்டு மூடியிருப்பதை அறிந்து கொண்ட தலைவர் 19.08.2024 ஆம் தேதி ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சித் தலைவர், சுகாதாரத்துறை அதிகாரிகள், வட்டாட்சியர் அனைவருக்கும் தகவல் தெரிவித்து கடிதமும் கொடுத்துள்ளார் அதன் அடிப்படையில் அனைத்து துறை அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சென்றுள்ளனர் கிராம நிர்வாக அலுவலர் ரத்தனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் , மாவட்ட அலுவலகம் மூலமாகவும் உத்தரவா வழங்கப்பட்டுள்ளது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க கடிதம் வழங்கியுள்ளனர் ஊராட்சி மன்ற தலைவர்23. 11. 2024 அன்று இணையதளம் மூலமாகவும் காவல்துறைக்கு புகார் அனுப்பியுள்ளார் இந்த சம்பவம் குறித்து தினத்தந்தி பத்திரிக்கையில் செய்தி வெளியானது ஆனாலும் இதுவரையில் துறை சார்ந்த அதிகாரிகளால் எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்து வந்தது..மழையில் நனைந்த மருத்துவக் கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசியது மேலும் நிலத்தடி நீரில் மருத்துவ கழிவுநீர் கலந்துள்ளதால் அப்பகுயில் உள்ள குடிநீர் பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் சமீபத்துல கல்குவாரி அருகே உள்ள தண்ணீரை மாடு குடித்ததால் இறந்து

போனதுகுறிப்பிடத்தக்கதுஇப்படி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாரைக் காப்பாற்ற இந்த மௌனம் மக்கள் நலம் கருதிதான் அனைத்து துறைகளும் உருவாக்கப்பட்டது ஒவ்வொரு துறையும் மக்களுக்கான குறைவுகளை நிவர்த்தி செய்ய வேண்டும், மக்களிடம் வருகிற புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் பூட்டுத்தாக்கு ஊராட்சிக்குட்பட்ட கன்னிகாபுரம் சம்பவத்தில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவது மன வருத்தம் அளிப்பதாக அப்பகுதிமக்கள் கூறுகின்றனர் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படுமா? அந்தோ பரிதாபம்!

Related Articles

Back to top button
Close
Close