fbpx
Others

இந்தியாவைச் சாடும் கனடா…?

அடுத்த குற்றச்சாட்டு...' - இந்தியாவை சாடும் கனடா!

ஒரு காலத்தில் இந்தியாவின் ‘நல்ல நண்பராக’ இருந்த கனடா, இப்போது இந்தியா மீது ஒவ்வொரு குற்றச்சாட்டுகளாக அடுக்கி உறவில் விரிசலை தொடர்ந்து பெரிதாக்கி வருகிறது.தற்போது கனடா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனடா தேர்தலில் சீனாவிற்கு அடுத்து, இந்தியாவின் தலையீடு அதிகம் இருக்கிறது. சீனாவைப் போன்று இந்தியாவும் உலக அளவில் மிக முக்கிய நாடு. இந்தியாவும், கனடாவும் பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், அந்த உறவில் சில சிக்கல்கள் உள்ளன. அவை பல நீண்ட காலமாக இருந்துவருகிறது. மேலும், அது கனடாவில் இந்தியாவின் தலையீடுகளைக் காட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவிற்கு சம்பந்தம் உள்ளது என்ற இந்தியாவின் மீதான கனடாவின் பகிரங்க குற்றச்சாட்டிற்கு பிறகு, கனடா தேர்தல்களில் இந்தியாவின் தலையீடு உள்ளது என்பது இரண்டாவது மிகப்பெரிய பகிரங்க குற்றச்சாட்டு ஆகும்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில், “அத்துமீறிய தலையீடுகளை செய்கிறோம் என்கிற குற்றச்சாட்டை சுமத்துகிற அறிக்கையைப் பார்த்தோம். ஆனால், உண்மையில், கனடா தான் இந்தியாவின் உள்துறை விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு வருகிறது. அவர்கள் சட்டத்திற்கு புறம்பான குடியேற்றம் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் நடைபெறுவதற்கான சூழல்களைஉருவாக்குகிறார்கள். அந்த அறிக்கையில் இந்தியாவின் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறோம்” என்று கூறியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close