fbpx
Others

கீழ்பவானி வாய்க்காலில் பெண் பிணம்—போலீஸ் விசாரணை..

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உக்கரம் காளிகுளம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் பெண் பிணம் மிதந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை பார்வையிட்டனர். பின்னர் பிணத்தை மீட்டு ரூ. பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பிணமாக கிடந்த பெண்ணுக்கு 60 வயது இருக்கும். யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி உயிரிழந்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close