fbpx
Others

ஆசனூரில் 2 கரடிகள் வனத்துறை எச்சரிக்கை….

ஆசனூரில்ரோட்டை கடந்து சென்ற 2 கரடிகள்
வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் புலிகள், காட்டு யானைகள், கரடிகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உள்ளன.இந்த நிலையில் ஆசனூர் வனப்பகுதி சாலையை நேற்று அதிகாலை 2 கரடிகள் கடந்து சென்றன. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் சற்று தூரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். வாகன ஓட்டிகளை பார்த்ததும் கரடிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடி சென்றது. அதன்பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வனப்பகுதி சாலையில் காடிகள் நடமாட்டம் காணப்படுவதால் இரவு நேரங்களில் வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களில் இருந்து இறங்க வேண்டாம் என வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close