fbpx
Others

சத்திமங்கலத்தில் சிறுவன் ஓட்டி சென்ற கார் மின் கம்பத்தில் மோதி விபத்து..

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுக்கா கோம்புப் பள்ளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் தனது நண்பர்கள் 3 பேருடன் வீட்டின் முன் நின்றிருந்த காரை எடுத்துக் கொண்டு நன்பன் வீட்டிற்கு சென்றுள்ளார. அதன் பின் மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக திப்பு சுல்தான் ரோட்டில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது வரதம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த சிறுவன் மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் மற்ற மூவருக்கும் காயங்கள் ஏதுமில்லை என போலீஸார் தெரிவித்தனர். கார் மோதி வேகத்தில் மின்கம்பம் மற்றும் கார் சேதமடைந்தது. சத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close