தேனி நாடார் சரசுவதி உயர்நிலைப்பள்ளியில்,மாணவர்களின் சங்கமம்..

தேனியில்”ELITESOFNSHS 1978 “…ம் வருடம் பயின்ற மாணவர்களின் சங்கமம் !!!ஒருங்கிணைவோம்! உன்னதம் நோக்கி!!! தேனி மாவட்டம், தேனியில் – முன்னாள் தேனி நாடார் சரசுவதி உயர்நிலைப்பள்ளியில்,1977-1978 (SSLC 11ம் வகுப்பு பள்ளி இறுதி ஆண்டு ) பல வகுப்புகளில் பயின்று இன்று பல்வேறு வகையான அரசு மற்றும் பல்வேறு துறைகளிலும் , வியாபாரங்களிலும் பணிகள் புரிந்தும், அதில் சிலர் பணிகளில் ஓய்வும் பெற்று, தங்களது வாழ்க்கை என்ற பாடத்தை பயிற்று வித்த எங்களின் ஆசான்கள், மற்றும் நாங்கள் ஓடியாடி எங்களை இந்த அளவிற்கு உருவாக்கிய எங்கள் பள்ளியில் என்றும் மறக்க முடியாத 46 ஆண்டுகளுக்கு பின்பு நாளை 06/01/2025 தேதி திங்கட்கிழமை காலையில் , எங்களுக்கெல்லாம் பயிற்று வித்தஆசிரியப்பெருமக்களுக்கு நன்றி பாராட்டும் விழாநாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சீறும் சிறப்பாக பள்ளியின் நிர்வாகம் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புடைசூழ நடைபெற உள்ளது. இவ்விழாவில் நம் பழைய மாணவர்கள் கலந்து கொண்டு இச் சந்திப்பில் கலந்துரையாடி தங்களின் உணர்வுகளை பரிமாற்ற உள்ளனர்…… நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் அன்பான வாழ்த்துக்கள் உரித்தாகுக !!!…………………ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி