அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை!..

புளியம்பட்டி தச்சு பெருமாள் இவரது மனைவி ரேணுகா(29). நேற்று காலையில் வீட்டு வாசலில் அய்யப்ப பக்தர்கள் உட்கார்ந்திருப்பதை பார்த்தார். அப்போது அய்யப்ப பக்தர்கள் வேடத்தில் வந்த ஆசாமிகள் ரேணுகாவிடம் பேச்சு கொடுத்தனர். நீண்ட நேரம் பேசி கொண்டிருந்த அந்த ஆசாமிகள் திடீரென ரேணுகாவை தாக்கி காதில் கிடந்த அரை பவுன் தோடை திருடி கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 2 அய்யப்ப பக்தர்கள் சந்தேகப்படும் இடத்தில் நின்றிருந்ததை பார்த்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன் பின் முரணாக கூறினர் தீவிரவிசாரணையின் போது இந்த இருவரும் வீட்டில் தனியாக இருந்த ரேணுகாவிடம் நகை திருடியது தெரிய வந்தது.இதை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.அந்த 2ஆசாமிகளும்கோபிசெட்டிபாளையம், தாசம்பாக்கத்தை சேர்ந்த மோகன் (42), மூர்த்தி (41) என தெரியவந்தது. போலீசார் இருவரையும் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்.