தவெக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் 119 நாட்களுக்கு பிறகு கைது….

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் தவெக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காமல் தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவரின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் கைது – ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பதுபோல,கள்ளக்குறிச்சிதவெகசட்டப்பேரவைஉறுப்பினரின் ஒழுங்கீனத்தைமறைத்து,அவரைப்பாதுகாக்கபொய்மேல்பொய்களைக்கூறினார்கள்.அமைச்சர்கள் முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரை வரிந்துகட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள்விக்னேஷுக்குநல்லொழுக்கச்சான்றிதழ்வழங்கும்வேலையில்இறங்கினார்கள்.பாதிக்கப்பட்டஅதிகாரியைமனதளவில்உடைக்கும்வகையில்சமூகவலைத்தளங்களில்இழிவானபிரசாரம்மேற்கொண்டார்கள்.அத்தனைஅழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப்புகார்அளித்தார்.உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது தவெக எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார்.119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்லஅழுத்தம்கொடுத்தவர்களும்நடவடிக்கைக்குஉள்ளாகவேண்டும்.சட்டப்படிநியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.