ஒட்டுநர்களின் சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம்…
தமிழக வெற்றிக் கழகம், தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தியது. கடந்த 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று, ‘வெற்றிப் பயணம்’ எனும் இத்திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுதும் அரசு பேருந்துகளில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம், பெண்கள் இலவச பயணம்மேற்கொண்டுவருகின்றனர்.இந்ததிட்டத்தால்,மாநிலம்முழுதும்ஆட்டோக்களில்பெண்கள்பயணம்செய்வதுமுற்றிலுமாகநின்றுபோனது.இதனால், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதாகக் கூறி, இத்திட்டத்தை கண்டித்து, நேற்று ஊத்துக்கோட்டை வி.ஏ.ஓ., அலுவலகம் முன், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க தலைவர் தியாகு தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் பங்கேற்றனர்.தமிழக அரசு, தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தின் போது ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தினர்.சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி மற்றும் வாடகை வாகன ஒட்டுநர்களின் சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இதில், தமிழகம் முழுதுமிருந்து, ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.‘தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக, ஆட்டோ கட் டணம் உயர்த்த ப்படவில்லை. அதை உயர்த்த வேண்டும ் ’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடந்தது.போராட்டம் நடத்தியவர்களுடன், போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் நேற்று பேச்சு நடத்தியதை அடுத்து, போராட் டம் வாபஸ் பெறப்ப ட்டது .