ஆதவ் அர்ஜுனா, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது என்ன வருத்தம் ..?
கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து தவெக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி வரும் நிலையில் நேற்று பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது வருத்தம் உள்ளதாகவும், இதே கம்யூனிஸ்ட்கள் திமுக ஊழல் செய்ததா இல்லையா என்பதை சொல்ல முன் வருமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் சிபிஐ முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தல்வரும் சரி, அமைச்சர்களும் சரி பிரச்சினைகளை திசை திருப்புகிறார்கள். பிரச்சினையை திசை திருப்புவதால் எந்த பிரச்சினையும் தீராது. ஒரு பிரச்சினையை சட்டமன்ற உறுப்பினர் முன் வைத்தால் அதற்குஉரியபதிலைஅளிக்கவேண்டியகடமைமுதல்வருக்கும்,அமைச்சர்களுக்கும் உள்ளது. அதற்கு மாறாக திசை திருப்பி பேசுவதால் எந்த பயனும் ஏற்படாது.அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏன் எங்க மேலே திடீரென்று இந்த கோபம் என்று தெரியவில்லை. அவர் சொல்கின்ற இந்த இடதுசாரிகள் கட்சிகளின் ஆதரவினால் தான் இந்த ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. சிபிஐயும், சிபிஎம்மும் ஆட்சிக்கு அளித்து வருகின்ற ஆதரவினை திரும்பப் பெற்றதுஎன்றால்,சட்டசபையேஇருக்காது.மந்திரிசபையேஇருக்காது.ஆளுநர்காத்துக்கொண்டு இருக்கிறார். எப்போது நாங்க சொல்லுவோம் என்று இருக்கார்.. சண்முகமும்,
வீரபாண்டியனும்எப்போதுடாசொல்லுவார்எனகாத்துக்கொண்டு இருக்கிறார். ஆதவ் அர்ஜுனா இதை தெரிந்து பேசுகிறாரா.. இல்லை தெரியாமல்பேசுகிறாராஎன்றுஎனக்குதெரியவில்லை. இந்த கூட்டத்தில் இதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஏனென்றால் இங்கு தவெக நண்பர்களும் இருக்கிறார்கள்” என்றார்.அப்போதுவிமானநிலையம்தனியார்மயமாக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுபினர். இதற்கு பதில் அளித்த முத்தரசன் கூறுகையில், “விமான நிலையத்தை தனியார்மயம் ஆக்கக் கூடாது.. அமைச்சர் கூட இதற்கு பதில் சொல்லியிருக்கிறார், விமான நிலையத்தை தனியார்மயம் ஆக்கவில்லை. பராமரிப்பு பணியைத் தான் தனியாரிடம் கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். எங்களை பொறுத்தவரைக்கும் இந்த கருத்தையும் ஏற்பதற்கு இல்லை.ஏனென்றால், அது தனியாரிடம் போய்விட்டது என்றால், அதில் வேலை பார்க்கின்ற ஊழியர்களும் கொத்தடிமை மாறி மாற வேண்டிய நிலைமை வரும். பராமரிப்புக்கும் விட கூடாது. தனியார் கிட்டயும் கொடுக்க கூடாது. ஏனென்றால் கோடிக்கணக்கான ரூபாய் அதில் கொட்டப்பட்டு இருக்கிறது. அந்த பணம் முழுக்க மக்களுடைய பணம். மத்திய அரசாங்கம் படிப்படியாக விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், ரயில்களை தனியார்மயமாக்க முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக தெரிகிறது. சென்னை விமான நிலையத்தை பொறுத்தமட்டில் லாபகரமாக இயங்கிக்கொண்டிருக்கிற சர்வதேச விமான நிலையம். எனவே சென்னை விமான நிலையம் தனியார்மயம் ஆக்கும் முடிவையும் நாங்க ஏற்கவில்லை. அந்த பணிகளை மட்டும் தனியாரிடம் கொடுப்போம் என்று சொல்கிற முடிவையும் ஏற்கவில்லை.. என்று கூறினார்.