செங்குன்றம்–எஸ். கே. எல். எஸ். கேலக்ஸி மால் மூடப்படுமா?
எஸ். கே. எல். எஸ். கேலக்ஸி மால் மூடப்படுமா?
சென்னைக்கு அருகே செங்குன்றம் காவல் நிலையம் எதிரில் சுமார் 100 கோடி மதிப்பில் 2016ல் கட்டப்பட்டது எஸ். கே.எல்.எஸ். கேலக்ஸி மால்.இது திரைப்பட நடிகை சமந்தா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.இதன்உரிமையாளர் மோகன் ஈஸ்வரன் இதில் பல்வேறு உணவு கூடங்கள்,துணிக்கடைகள்,மற்றும்பொழுதுபோக்கு அம்சங்கள், இவற்றோடு பி.வி.ஆர். திரையரங்கம் ஐந்து நடைபெற்று வந்தது.தற்போது கேஎஃப்சி சிக்கன் மற்றும் பி.வி.ஆர் தியேட்டர்கள் மட்டுமே செயல்படுவதாக தெரிகிறது.மால் திறக்கப்பட்டுசுமார்10ஆண்டுகள்ஆனபடியால்கட்டிடம்ஆங்காங்கேபழுதடைந்துள்ளது.தரைத்தளத்தில்நுழைவாயில்மேல்பகுதியில்மேற்கூரைஉடைந்துசிமெண்டுகீழேகொட்டுகிறது.அதேபோல நான்கு தளங்களும் பராமரிப்பின்றி பாழ் அடைந்து கிடக்கிறது.5 தியேட்டர் மட்டுமே செயல்படுவதால் முன்னணிநடிகர்கள்நடித்ததிரைப்படங்கள் வரும்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகிறார்கள்.அதற்கு ஏற்றார் போல கட்டிடம் இருக்கிறதா என்பது சந்தேகமாக இருக்கிறது.இடையில் சில காரணங்களால் கேலக்ஸி மால் மூடப்பட்டிருந்தது.அதன் பிறகு பி. வி. ஆர். தியேட்டர் குத்தகை காரணமாக திறக்கப்பட்டதாக தெரிகிறது.இருந்தாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரைப்படம் பார்ப்பதற்கு வருவதால் கட்டிடம் பலமாக இருக்கிறதா?உரிய காற்றோட்ட வசதி இருக்கிறதா?ஏர்கண்டிஷன் போடப்பட்டதிரையரங்கில் ஏர் கண்டிஷன் ஒழுங்கா போடப்படுகிறதா?உணவுப் பொருட்கள் தரமாகவழங்கப்படுகிறதா?மிகமிக அதிகமான விலையில் உணவுப் பொருள்கள் விற்பதாகவும் தெரிகிறது.இவைகளை கமர்சியல் டேக்ஸ் அதிகாரிகள், மாவட்டவருவாய் அதிகாரிகள், மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புதுறை நிர்வாகம் தலையிட்டுஎஸ்.கே.எல். எஸ் கேலக்ஸி மால் கட்டிடம் மற்றும் தியேட்டர் வளாகம் பாதுகாப்பாக இருக்கிறதா?என்பதை உடனடியாக சோதனை நடத்தி தெளிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், ரசிகர்களும் கோரிக்கை வைத்துள்ளனர் தமிழக அரசு கவனிக்குமா?



