நீட் தேர்வு பற்றி அமைச்சர் நிர்மல்குமார் — சிறப்பு செய்தி..
இளைஞர்கள் போராட்டம் இந்தியா முழுவது நடந்து கொண்டு இருக்கிறது. அதில் இளைஞர்கள் எல்லாம் போராட்டம் பண்ணி கொண்டு இருக்கிறார்கள். ஒரு சில பேர் நீட் தேர்வை சீரமைக்க வேண்டும் என்றும், ஒரு சில பேர் நீட் தேர்வு வேண்டாம் என்றும் சொல்கின்றனர். இதில் திமுக தேவையில்லாத வேலைசெய்கிறது.முதலில் உதயநிதிக்கு சுயபரிசோதனை செய்ய வேண்டும். சென்னையில் நடந்த நீட் போராட்டத்திற்குள் புகுந்து திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது. திமுகவிற்கு தலைமை தாங்கும் தகுதி உதயநிதிக்கு இருக்கிறதா? திமுகவில் கனிமொழியா? உதயநிதியா? என வாக்கெடுப்பு நடத்த தயாரா? வாக்கெடுப்புநடத்தட்டும்பார்க்கலாம்.இவ்வாறுஅமைச்சர்நிர்மல்குமார்கூறினார்.உதயநிதிக்கு யாரோ தவறாக அட்வைஸ் செய்கின்றனரா என்று தெரியவில்லை.ஜென்சினா- டிஎம்கே என்று டிசர்ட் போட்டு அங்கே, அங்கே இரண்டு இரண்டு பேரா, நான்கு நான்கு பேரா 200 ரூபாய் கொடுத்து உட்கார வைத்து இருக்கிறார்கள். முதலில் உதயநிதி ஜென்சினா என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்.4பேர்சொல்லிகொடுக்கவேண்டும்.இந்தமாதிரிகோமாளிதனமான வேலையை விட்டு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும்.அரசு சார்பாக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு, அறவழியில் நடக்கும் போராட்டங்களுக்கு முழு அளவில் பாதுகாப்பு கொடுத்து, அவர்களுக்கு தேவையானஅனுமதியும்கொடுக்கப்பட்டுஇருக்கிறது.நீட் தேர்வு குறித்து திமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் நிறைய பேசி இருக்கிறார்கள். இதை பேசக்கூடிய எந்த தகுதியும் திமுகவுக்கு கிடையாது.அவர்கள் தான் 5 வருடமாக இதனை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு போனார்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். எப்படி நிறுத்துவார்கள். அது பார்லிமென்டில் மசோதா நிறைவேற்ற வேண்டும்.சுப்ரீம்கோர்ட் உத்தரவு, எப்படி நிறுத்துவீர்கள். தவறான நம்பிக்கையை மக்களிடத்தில் கொடுத்து இரண்டு வருடம் ஓட்டினார்கள். இப்பொழுது வந்து மேடையில் பேசுகிறார்கள். பேசக்கூடிய திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாருக்கும் கிடையாது.நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நமது நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது, அதற்கான காலம் வரும் போது முதல் குரலாக கொடுப்போம். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.