நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்க விரைவு நீதிமன்றங்கள்—பிரதமர் மோடி
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடந்து வருகிறது. பார்லிமென்டிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வினாத்தாள் மோசடிகளைச்ச தடுக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். இன்று நடக்கும் மத்திய அமைரவை கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்து இருந்தார்.தற்போது உள்ள சட்டத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு சிக்கும் தனி நபர்களுக்கு 3 முதல் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையிலான அம்சங்கள் சட்டத்தில் இடம்பெற்று இருந்தன. இது போன்ற குற்றங்களைமுறைப்படிஅரசிடம்தெரிவிக்காதஅமைப்பினருக்கு1கோடிரூபாய்வரைஅபராதம்விதிக்கப்பட்டுவந்தது.இந்தசட்டத்தைமேலும்வலுவாக்கும்பொருட்டு அதில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி புதிய சட்டத்தில் குற்றம் இழைப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இத்தகைய முறைகேடுகளில் சிக்கினால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமாக 10 கோடி ரூபாய் விதிக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்காகபொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டம், 2024-இல் திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டத்திருத்த மசோதா வரும் திங்கட்கிழமை பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.