fbpx
Others

முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விசிகவில் இருந்து விலகல்….?

முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபுபனையூர் பாபு வெளி​யிட்ட சமூக வலைத்​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சமீப காலங்​களாக விசிக தலை​வர் திரு​மாவளவனின் செயல்​பாடு​களும், அரசி​யல் நிலைப்​பாடு​களும் எனக்​குப் பெரும் வியப்​பை​யும் வேதனையை​யும் அளிக்​கின்​றன. ஒரு தெளி​வான நிலைப்​பாடின்​றி, அடிக்​கடி தடு​மாறு​வது அவரது இயல்​பல்ல.நேற்று ஒரு நிலைப்​பாடு, இன்று தொலைக்​காட்சி நேர்​காணலில் ஒரு நிலைப்​பாடு, நாளை செய்​தி​யாளர் சந்​திப்​பில் வேறொரு நிலைப்​பாடு, மீண்​டும் இரவில் சமூக வலைத்தள நேரலை​யில் முற்​றி​லும் முரணான ஒரு நிலைப்​பாடு எனத் தொடர்ந்து முன்​னுக்​குப் பின் முரணாகப் பேசுவது, அரசி​யல் களத்​தி​லும் தொண்​டர்​களிடையே​யும் பெரும் குழப்​பத்தை உரு​வாக்​கு​கிறது.நேற்று வரை ஒரு நடிகரை ஆர்​எஸ்​எஸ் மற்​றும் பாஜக பெற்​றெடுத்த பிள்ளை என்று கடுமை​யாக விமர்​சித்த அவர், இன்று அதே பிள்​ளை​யைத் தத்​தெடுப்​பது போல் நிலைப்​பாடு எடுப்​பது, அவர் இது​காலம் வரை சமரசமின்றி கட்​டிக்​காத்த கொள்​கை​களி​லும், கருத்​தி​யலிலும் தடம் மாறத் தயா​ராகி​விட்​டார் என்​ப​தையே அப்​பட்​ட​மாக வெளிப்​படுத்​துகிறது.விசில் அடிப்​பவர்​கள் எல்​லாம் திரையரங்​கத்​துக்​குத்​தான் செல்ல வேண்​டும், சட்​டப்​பேர​வைக்கு வரக் கூடாது. அவர்​கள் பெரி​யாரும், அம்​பேத்​கரும் பேசிய அரசி​யலை​யும், கொள்​கைகளை​யும் வீழ்த்​து​வதற்கு வந்​தவர்​கள் என்று சூளுரைத்த அவர், இன்று அவர்​களு​டனே கைகோர்க்​க​வும், இயக்​கத்​தின் கொள்​கையை மழுங்​கடிக்​க​வும் முற்​படு​வது முரண்​பாட்​டின் உச்​ச​மாகும். ஆட்சி அதி​காரங்​கள் வரும், போகும்.அது நிலை​யற்​றது. அரசி​யல் தளத்​தில், மக்​கள் சித்​தாந்​தங்​களை விடக் கவர்ச்​சி​யின் பின்​னால் ஈர்க்​கப்​படு​வது ஆபத்​தானது என்று அம்​பேத்​கர் கடுமை​யாக எச்​சரித்​துள்​ளார். ஆனால், இன்று அந்த அபாயகர​மான திசை​யில்​தான் பயணித்​துக் கொண்​டிருக்​கிறோமோ எனஅஞ்​சுகிறேன்.  .கொண்ட கொள்​கை​யிலும், எடுக்​கும் நிலைப்​பாட்​டிலும் உறு​தி​யாக இல்​லாமல், அடிக்​கடி நிலைப்​பாடு​களை மாற்​றி, குழப்​பத்​தி​லும் அவநம்​பிக்​கை​யிலும் செயல்​படும் ஒரு தலை​மை​யின் கீழ், இனி​யும் என்​னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்​கிறது.எனவே, விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சியி​லிருந்​தும், அடிப்​படை உறுப்​பினர் பொறுப்​பிலிருந்​தும் முழு​மை​யாக விலகு​கிறேன். இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்.

Related Articles

Back to top button
Close
Close