fbpx
Others

உதயநிதிஸ்டாலின்பேசியதற்கு முதலமைச்சர் விஜய் சரியானபதிலடி…!

CM Vijay Gives Strong Reply to Udhayanidhi Stalin who compared TVK Government with Pushpa Movie VIJAY Vs UDHAYANIDHI: புஷ்பா அரசு என்று ஏளனம் பேசுவதா.? உதயநிதிக்கு தரமான பதிலடி கொடுத்த விஜய்; என்ன சொல்லியிருக்கார்.?சட்டப்பேரவையில் இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின், தவெகவிற்குமக்கள்முழுமையானஆதரவைஅளிக்கவில்லைஎன்றும்,65சதவீதம்பேர்எதிராகவாக்களித்துள்ளனர் என்று கூறியதுடன், திமுகவின் ஆதரவாலேயே ஆட்சி அமைந்திருப்பதாக கூறினார். இதற்கு, புள்ளிவிவரங்களுடன்தனதுஎக்ஸ்தளபதிவில்பதில்கூறியுள்ளார்முதலமைச்சர்விஜய்.சமூகவலைதளபக்கதில்அதில்“பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்றஅரதப்பழைய,புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம்போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப்பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப்“இன்ஸ்டா ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள்” - பேரவையில் விஜய்க்கு உதயநிதி அறிவுரை பகிர்ந்துகொள்வோம்.நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு.அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமானமக்களின் வாக்குகள் அவை. இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று.தேர்தல்ஆணையம்வெளியிட்டுள்ளகணக்கு.  இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல? இதுமட்டுமாநம்த.வெ.க.வை3கோடியே21லட்சம்(இதில்சிலலட்சம்வாக்குகள்அதிகமாகசொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால்,தி.மு.க.மட்டும்தனியாகவாங்கியவாக்குகளின்படி3கோடியே68லட்சம்மக்களால்  நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன? மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல? மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம்.மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம்.நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர்.“ என்று திமுகவை முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close