fbpx
Others

தேனி–மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்க்கு…?

தேனி மாவட்டத்தில்செய்தியாளர்கள் என்ற பெயரில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலி பத்திரிகை நிருபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  எச்சரிக்கை !!! தேனி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் போலி பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் மற்றும் குவாரி உரிமையாளர்கள் ஆகியோர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக தொடர்ந்து புகார் மனுக்கள் வரப்பெற்றுள்ளது.தேனி மாவட்டத்தில்,மாவட்டஅளவில்மாவட்டநிர்வாகத்தால்அங்கீகரிக்கப்பட்டபத்திரிக்கையாளர்கள்தவிரஎங்குபார்த்தாலும்பத்திரிக்கையாளர்எனதங்களைத்தாங்களேஅறிமுகப்படுத்திக்கொண்டு,அரசுஅலுவலகங்கள்,தனியார்நிறுவனங்களில்அலுவலர்களைபணிசெய்யவிடாமல்இடையூறுசெய்வதாகவும்,பல்வேறுகசப்பானசம்பவங்களில்ஈடுபடுவதாகபுகார்மனுக்கள்பெறப்பட்டுள்ளது.மேலும், தங்களுக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும், கோரிக்கைகளை நிறைவேற்றிதருவதாகவும்கூறிபொதுமக்களைஏமாற்றிபணம்பறிப்பதாகதெரியவருகிறது.அங்கீகரிக்கப்படாத போலி நிருபர்கள், வாட்ஸ்அப் செயலி மற்றும் சமூகவலைதளங்களில்செய்திகளைவெளியிடுவேன்எனஅரசுஅலுவலர்களையும்,தனியார்அமைப்புபிரதிநிதிகளைமிரட்டிபணம்பறிப்பதாகதெரியவருகிறது.எனவே, பத்திரிக்கையாளர் என்ற பெயரில் போலியான அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு மோசடி செயல்களில் ஈடுபடும் போலி செய்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பத்திரிக்கையாளர் என்ற பெயரில் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத PRESS ஒட்டுவில்லைகளைஒட்டிக்கொண்டு, போலியான அடையாள அட்டை வைத்துக் கொண்டுள்ளோர்கள் மீதும் காவல்துறையின் மூலம் கடும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது போன்ற போலி நிருபர்களால் தான் நேர்மையாக, பொது நல நோக்கில், எவ்வித எதிர்பார்ப்புகள் இல்லாமல் செயல் படுகின்ற பத்திரிக்கையாளர்களையும், ஒரு வித அவமானத்துடன் செயல்பட வேண்டியுள்ளது… இந்த நிலை மாறவேண்டும்? மாறுமா !!! அதேபோல், பத்திரிக்கையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள் உரிய ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார்தெரிவித்தால்அந்தநபர்கள்மீதுஉடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்.எனவே,பொதுமக்கள்,வியாபாரிகள், வணிக நிறுவன பிரநிதிகள், அரசு அலுவலர்கள் போலி நிருபர்களை கண்டு அச்சம் கொள்ளாமல் மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகுந்த ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட ஆட்சியரக அலுவலக தொலைப்பேசி எண்.94980 42443, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைப்பேசி எண்.94981 01570 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்களின் தகவல்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படும்எனதெரிவிக்கப்பட்டுகிறது.மேற்கண்டஅறிவிப்பைவெளியிட்டமாவட்டஆட்சியருக்குநன்றிதெரிவிப்பதோடு  இது வெறும் உத்தரவு என்று இல்லாமல் நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்திட வேண்டும் என்று மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.!!! பொறுத்து இருந்து பார்ப்போம்!!!..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச்செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி..

Related Articles

Back to top button
Close
Close