fbpx
OthersRE

இஸ்லாம் காபிர்களை வெட்டுங்கள் என சொல்லியதா? விளக்குகிறார் சகோதரி,வாசுகி மோகன்.

வணக்கம்
(திருக்குரானில் காஃபிர்களை வெட்டுங்கள்)

(முஹம்மது நபி)
6ம் நூற்றாண்டில் 22.4.571ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்த முஹம்மது நபி அவர்கள் 8.6.632ம் மதினா நகரில் மரணம் அடைந்து விட்டார்கள்.

(திருக்குரான்)
இறைவனால் ஜிப்ரில் (வானவர்) மூலம் முஹம்மது நபி அவர்களுக்கு சொல்லப்பட்டது திருக்குரான் என்ற வேதம்.

23 ஆண்டுகள் இறைவனால் சொல்லப்பட்ட இந்த வேதத்தை முதன் முதலில் கலிபா உஸ்மான் அவர்களின் காலத்தில்

ஜெர்மனி நாட்டில் ஹர்பாக் தலைநகரத்தில் எழுத்து வடிவில் அச்சிட பட்டு அதன் ஒரிஜினல் காப்பியை தாஷ்கண்ட் நாட்டிலும், துருக்கி நாட்டில் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் இன்று வரை பாது காக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த உலக திருமறை திருக்குரானில்
114அத்தியாயங்களும்
30பாகங்களும்
6236வாக்கியங்களும் (6666)
321267எழுத்துக்களும் கொண்டு உள்ளது.

இந்த வேதத்தில் Phd பட்டம் பெற்றவள் நார்வே யூனிவர்சிட்டியில் நான்.

(காஃபிர்களை வெட்டுங்கள்)
இந்த திருக்குரானில் காஃபிர்களை வெட்டுங்கள் என்று இருப்பதாக சில மத வெறி பிடித்த மிருகங்களால் பொய்யாக பிரச்சாரம் செய்யப் பட்டு வருகின்றது.

அது உண்மை என்று நம்பி ஹிந்து, கிறிஸ்தவ சகோதர, சகோதிரிகள் இன்று வரை உண்மை உணராமல் இருப்பது தான் வேதனையான விஷயம்.

எந்த அத்தியாயத்தில், எந்த வசனங்களில் அப்படி சொல்லப்பட்டு உள்ளது என்றால் அப்படி சொல்லும் மத வெறியனுக்கு பதில் சொல்ல தெரியாது.

உலகில் யூதர்கள், கிருத்தவர்கள்,அரேபிய மொழியில் புலமை பெற்றவர்கள் பலர் உண்டு.

அப்படி திருக்குரானில் ஒரு வார்த்தை இருந்து இருந்தால் இந்த உலக திருமறை திருக்குரான் எப்பொழுதோ தடை செய்யப்பட்டு இருக்கும்.

6ம் நூற்றாண்டில் இருந்து 21ம் நூற்றாண்டு இன்று வரை ஏன் தடை செய்ய முடியவில்லை?

அப்படி ஒரு வார்த்தை இல்லை.
காஃபிர் என்ற அரேபிய சொல்லுக்கு ஆங்கிலத்தில் (Unbelievers or Disbeliever) தமிழில் இறை மறுப்பாளன்.

முஷ்ரிக்கின் என்ற அரேபிய வார்த்தைக்கு ஆங்கிலத்தில் (Idolatry)
தமிழில் இணை வைப்பவன்.
இறைவனுக்கு (இணை வைப்பவன்)

திருக்குரானில் காஃபிர்களை கொல்லுங்கள் என்றோ, முஷ்ரிக்கின்களை கொல்லுங்கல் என்றோ ஒரு வசனத்தை சுட்டிக்காட்ட எவனாவது முடியுமா? அப்படி ஒரு வார்த்தையே சொல்லப்படவில்லை.

அத்தியாயம் 2ல் 286வசனங்கள் உள்ளது. அதில் வசனம் 190, 191, 192
போர் விதிமுறைகள் பற்றி இறைவன் சொல்வதாக சொல்லப்பட்டு உள்ளது.

இது போன்ற வசனங்களை அர்த்தம் புரியாமல் சில மத வெறியர்கள் காஃபிர்களை வெட்ட சொல்கிறது என்று பிரச்சாரம் செய்து விட்டார்கள்.

திருக்குரானில் என்ன சொல்ல படுகிறது. அத்தியாயம் 2ல் வசனம் 190, 191, 192 சுருக்கமாக

(உங்களை எதிர்த்து போர் செய்பவர்களோடு நீங்களும் இறைவனின் பாதையில் நின்று போர் செய்யுங்கள்.ஆனால் வரம்பு மீறாதீர்கள்)

மத வெறி கொண்ட மிருகங்களே ஒரு நாட்டில் போர் செய்யும் போது போர் வீரனுக்கு போர் தளபதி கூட ஆணை இட மாட்டான் வரம்பு மீறாதீர்கள் என்று.

திருக்குரான் ஆணை இடுகிறது வரம்பு மீறாதீர்கள் என்று.

(உங்களை கொன்றவனை அவனை கண்ட இடத்தில் நீங்கள் கொன்றுவிடுங்கள். உங்களை எந்த இடத்தில் இருந்து வெளியேற்றினார்களோ அந்த இடத்தில் இருந்து அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்.மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களிடம் சண்டை இடாத வரை அவர்களோடு நீங்கள் சண்டை இடாதீர்கள், அவர்கள் சண்டையிட்டால் அவர்களை கொல்லுங்கள்) யாரை கொல்லுங்கள் உங்களோடு போர் புரிபவனை காஃபிர் என்றோ, முஷ்ரிபக்கின் என்றோ ஒரு வார்த்தை உண்டா?

அவர்கள் அவ்வாறு சண்டை இடாமல் ஒதுங்கி விட்டால், நீங்கள் அவர்களை கொல்லாதீர்கள், இறைவன் அவர்களை மன்னிப்பவனாகவும், கருணை உள்ளவனாகவும் இருக்கிறான்)

திருக்குரானில் எந்த இடத்தில் காஃபிர்களை கொல்லுங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது என்பதை எவனாவது ஒருவன் சுட்டிக்காட்டி விட முடியுமா?

திருக்குரானில் பலர் Phd செய்து பட்டம் வாங்கி இருக்கலாம். ஆனால் இந்த அழகிய வேதத்தை என்னை போல ஒவ்வொரு வார்த்தையையும் ஆய்வு செய்து ரசித்து படித்து, தேர்வு எழுதி Phd Gold Medals வாங்கிய ஒரு இந்து சமூகத்தில் யாரும் இருக்க முடியாது.

திருக்குரானில் காஃபிர்களை கொல்லுங்கள் என்ற ஒரு வார்த்தை இல்லை, இல்லவே இல்லை.

என் தமிழ் சமூகமே திருக்குரான் என்பது உலக மக்களுக்காக, உலக உயிர் இனங்கள் அனைத்துக்கும் சொந்தமான ஒரு நூல். அதை நீ அறிந்து கொள்ளவே இந்த ஒரு பெரிய கட்டுரை.

(அன்புடன் வாசுகி மோகன்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close