வாலாஜா நகர காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா…

வாலாஜா நகர காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசேன் பங்கேற்பு வாலாஜா நகர காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டதுவாலாஜா பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா அசேன் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்துரை வழங்கினார் அதனைத் தொடர்ந்து கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர்டி.பாலகிருஷ்ணன், மாநில மனித உரிமைகள் கழகம் துணைத் தலைவர் கோடீஸ்வரன், மாநிலபொதுச் செயலாளர் நியாஸ்,இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சர்மிளா லீலா கிருஷ்ணன்,ராணிப்பேட்டை இளைஞர் அணி பொதுச் துணைச் செயலாளர் அருண், மாவட்ட ஓபிசி அணியின் தலைவர் மொய்தின், சோளிங்கர் இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் மகேஷ் குமார், பத்மநாபன், நந்தகுமார், உள்ளிட்ட காட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.