ஆவடி மாநகராட்சி ஆணையர் உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆவடி மாநகராட்சி கமிஷனராக உள்ள கே.தர்ப்பகராஜ், உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக உள்ள (மத்தியம்) எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், ஆவடி மாநகராட்சி ஆணையராகவும்; மதுரை மாநகராட்சி ஆணையராக உள்ள கே.ஜி.பிரவீன்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராவும்(மத்தியம்); கடலூர் மாவட்ட கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) மற்றும் கடலூர் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சி திட்ட அதிகாரியாக உள்ள எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக உள்ள வி.சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும்; பெருநகர சென்ைன மாநகராட்சி மண்டல துணை ஆணையராக உள்ள(வடக்கு) எம்.சிவகுரு பிரபாகரன், கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையராகவும்; தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) மற்றும் தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சி திட்ட அதிகாரியாக உள்ள தாகரே சுபம் தியாந்தியோராவ், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப்-கலெக்டராக உள்ள கட்டா ரவி தேஜா, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராகவும்(வடக்கு); கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையராக உள்ள எம்.பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநராகவும் (உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டங்கள்); பொள்ளாட்சி சப்-கலெக்டராக உள்ள எஸ்.பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும்(வளர்ச்சி); ஓசூர் சப்-கலெக்டராக உள்ள ஆர்.சரண்யா, கடலூர் மாவட்ட கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) மற்றும் கடலூர் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சி திட்ட அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Others