fbpx
Others

ஸ்பெயின் வீராங்கனைபடோசா கால்இறுதிக்குதகுதி

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்:ஸ்பெயின் வீராங்கனை படோசா கால்இறுதிக்கு தகுதி
பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 6-4, 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள லேலா பெர்னாண்டஸ்சை (கனடா) வீழ்த்தி கால்இறுதிக்குள் கால் பதித்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் பெரேட்டினி 6-4, 7-5 என்ற நேர் செட்டில் லாய்ட் ஹாரிஸ்சை (தென் ஆப்பிரிக்கா) விரட்டியடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதே போல் ரஷிய வீரர் ஆந்த்ரெ ரூப்லெவ் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை வென்றார்

Related Articles

Back to top button
Close
Close