அதிமுகஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்கண்களில்ரத்தக்கண்ணீரைவரவைத்தது..
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதியத்திட்டத்திற்குபதிலாக,உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை(TAPS ) அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, சென்னையில் ஜாக்டோ ஜியோ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முந்தைய அதிமுக ஆட்சி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்ததாக குற்றம் சாட்டினார். அவரது உரையின் முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்.பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக்காக பணியாற்றும் நீங்களும் சேர்ந்ததுதான் அரசாங்கம்” என்று கூறினார். மேலும், ஒரு நாணயத்தின் 2 பக்கங்களாக இருக்கும் அமைச்சரவையும், அரசு ஊழியர்களையும் ஒருசேர பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலம், அரசு ஊழியர்களின் நலன் காக்கும் பொற்காலமாக இருந்ததாக அவர் பெருமிதம் தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்காக அவர் செய்த சாதனைகளையும், சீர்திருத்தங்களையும் சொல்ல இந்த ஒரு மாநாடு போதாது என முதலமைச்சர் கூறினார். மேலும், அரசுஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்மைகளை மட்டுமே செய்ததுதான் கருணாநிதியின் ஆட்சி என குறிப்பிட்டார்.பொதுமக்களின் நலனுக்கான திட்டங்களை கொண்டு சேர்ப்பவர்கள் தான் அரசு ஊழியர்கள். அதேபோல், ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல, தொண்டு எனவும், அவர்களால் தான் இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் 2-வது சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஆசிரியர்கள் பாடுபட்டு உருவாக்கியவர்கள் தான், உலகம் முழுவதும் பெரும் பொறுப்புகளை வகித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். திமுக அரசின் ஏராளமான திட்டங்கள் மூலம் மக்களிடம் செல்வாக்கு கிடைத்திருப்பதில்,பெரும்பங்குஅரசுஊழியர்களுடையதுதான்எனவும்அவர்தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருவதாகவும், தமிழ்நாட்டிற்கு திட்டமிட்டுநிதிநெருக்கடியைமத்தியஅரசுஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். அதோடு,பழையஓய்வூதியத்திட்டம்பறிபோனது அதிமுக ஆட்சியின் போதுதான்என்றும்,வேர்வைசிந்திஉழைக்கும்அரசுஊழியர்கள்,ஆசிரியர்களின்கண்களில்ரத்தக்கண்ணீரைவரவைத்ததுதான்அதிமுகஆட்சிஎன்றுசாடினார். .தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடும் நிதி நெருக்கடியிலும்,அரசுஊழியர்கள்,ஆசிரியர்களின் நலன்களை காக்கும் வகையில், அத்தனை செலவினங்களையும் அரசு ஏற்கும் என்று அவர் உறுதி அளித்தார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை, திராவிட மாடல் 2.0-விலும் தொடர்ந்து நிறைவேற்றுவோம் என உறுதிபடத் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…