fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டம் சென்னையில் துவக்கம்.!

ஐ.ஓ.சி., எனப்படும் இந்தியன் ஆயில் நிறுவனம், டோர் டெலிவரி மூலம் டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் தொடங்கியது.

தற்போது சென்னையிலும் டீசல் ஹோம் டெலிவரி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. டீசலை விட வேகமாகத் தீப்பற்றக்கூடியது பெட்ரோல் என்பதால் சோதனை முயற்சியாக டீசல் மட்டும் ஹோம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக டிஸ்பென்ஸர் பொருத்தப்பட்டுள்ள டீசல் டேங்கர் லாரி மூலம் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது. இந்த சேவை முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் துவங்கப்பட்டது. விரைவில் இந்தியா முழுவதும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது எனவும், டோர் டெலிவரி சேவையில் டீசல் மட்டுமே அளிக்கப்படும் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது சென்னையிலும் டீசல் ஹோம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. டீசல் மட்டும் ஹோம் டெலிவரி செய்யப்படுவதால் வணிக வாகனங்கள் பெருமளவில் இந்தச் சேவையைப் பெற்று பயன்பெறுவார்கள்.

அதே நேரம் குறைந்தது 200 லிட்டர் டீசல் ஆர்டரை அளிக்கும்போது மட்டுமே ஹோம் டெலிவரி செய்யப்படும். இதுவே 2,500 லிட்டருக்கும் அதிகமாக ஹோம் டெலிவரி செய்ய வேண்டும் எனில் பெட்ரோலிய மற்றும் வெடிப்பொருட்கள் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து உரிமம் பெற்று இருக்க வேண்டும்.

Related Articles

Back to top button
Close
Close