சென்னைமாநகராட்சி 31வதுவார்டு மாமன்ற உறுப்பினர். சங்கீதாபாபு—-சிறப்பு செய்தி
சென்னைமாநகராட்சி31வதுவார்டு மாமன்ற உறுப்பினர். சங்கீதாபாபு
புழல் கதிர்வேடு சத்தியமூர்த்தி நகர் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும் ,சமூக விரோதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் 31 கண்காணிப்பு கேமராக்களை அமைத்து அதன் செயல்பாடு, இயக்கத்தினை கொளத்தூர் காவல் துணை ஆணையாளர். பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள். ரஜினிகாந்த், பெருந்துறை முருகன் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். நிகழ்ச்சியில் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர். பாண்டியராஜன் பேசும்போது பொதுமக்கள் தங்களது வெளியூர் பயணத்தின் போது வீடுகளை பூட்டிக்கொண்டு செல்வது பற்றி காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உங்கள் வீடுகளில் அருகில் சந்தேகப்படும் படியான நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதில் சமூக நல ஆர்வலர் பாபு உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.